தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்
The Forecast 3 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை
உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள்
கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள
கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார். இத்திறப்பு விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, ஊரக
வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு
மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் .கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள
மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments