சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு
The Forecast 3 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் (14.3.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர வெள்ளஸஅபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை ஆலோசனைக் குழுத் தலைவர் முனைவர் வி. திருப்புகழ், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் சமர்ப்பித்தார். தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா,இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஸகூடுதல் தலைமைச் செயலாளர் . பிரதீப் யாதவ், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
-
0 Comments