Loading . . .




முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்”

The Forecast 3 years ago அரசு செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள்  (18.03.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்

தயாரிக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023”, “தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023”, “தமிழ்நாடு சரக்கு போக்குவரத்துக் கொள்கை மற்றும்

ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023” மற்றும் “தமிழ்நாடு தொழில் நுட்ப ஜவுளி, மறுகழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்” ஆகியவற்றை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைஅரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப.,

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் செயலாளர் திருமதி ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர்

திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News