தீவுத்திடலில் நடைபெற்ற 47 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் நிறைவு விழா
The Forecast 3 years ago அரசு செய்திகள்
(23.03.2023) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 47 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் நிறைவு விழாவில்,
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிறந்த அரங்குகளுக்கு,
சுற்றுலாத்துறை அமைச்சர் .கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா. சுப்ரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர்.பி.சந்தரமோகன், இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர்
மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments