மழைநீர் வடிகால் பணிகளை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விரைந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக ஆய்வு - கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விரைந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக தொடர்புடைய துறைகளின் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் (25.05.2023) நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .பிரதீப் யாதவ், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் "
கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் .கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் .எஸ்.ஏ.ராமன், இ.ஆ.ப., மற்றும் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், கூடுதல், இணை, துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments