புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றார் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப.,
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழக அரசின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் கடந்த 2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. முதல்வர் ஸ்டாலின் மே 7-ம் தேதி பொறுப்பேற்ற நிலையில், அன்றே தலைமைச்செயலராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகள் தலைமைச் செயலராக பணியாற்றிய இறையன்பு நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமைச் செயலராக கடந்த 1989 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலராக இருந்த ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு பணியில் இருந்து பிரியா விடை பெற்ற நிலையில், புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். அவரிடம்பொறுப்புகளை இறையன்பு ஒப்படைத்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அனைத்து அதிகாரிகளிடமும் விடை பெற்று புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நூலை முதல்வரிடம் அளித்து வாழ்த்து பெற்றார்.
0 Comments