Loading . . .




ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை நேரில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்

The Forecast 2 years ago ஆந்திரா

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்..

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பலாசா ரயில் சிக்னல் கிடைக்காததால் மிகவும் நிதானமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த ராயகடா - விசாகப்பட்டினம் பயணிகள் ரயில், பலாசா ரயில் மீது வேகமாக மோதியது.

இதைத் தொடர்ந்து, எதிரே 2 டிராக் தள்ளி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பலாசா ரயில் பெட்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு ரயிலும் சேதம் அடைந்தது. ராயகடா ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இரவில் நடந்த இந்த கோர விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 52 பேர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் விஜயநகரம் வந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே, நேற்று காலை விஜயநகரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவோரை ஆந்திர அமைச்சர் சத்தியநாராயணா நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு கண்டிப்பாக உதவி செய்யும். இறந்தவர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடனுக்குடன் அவரவர் உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவி தொகை வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் பி. சத்திய நாராயணா தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

ஆந்திரா Relateted News