Loading . . .




ஆந்திராவில் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

The Forecast 1 year ago ஆந்திரா

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகேநேற்று அதிகாலையில் கரையைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு, குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள்அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்:

பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கனமழை, நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா, கோதாவரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மிதக்கும் 110 கிராமங்கள்:

தெலங்கானாவின் பல பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. இதனால், கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதுகுறித்த தகவலை மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் கொண்டு சென்றார். உயிரிழப்பை தடுக்க அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அமித் ஷா உத்தரவிட்டார்.

0 Comments

Post your comment here

ஆந்திரா Relateted News