ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் நேற்று வெள்ள ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 1 year ago ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் சில மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக விஜயவாடா நகரம் சீர் குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000 ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. 250-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 500-க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 3.5 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பல நூறு கி.மீ வரை சாலைகள் அடித்து செல்லப்பட்டன. கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின.
0 Comments