எதிர்பாராத விதமாக வேகமாக வந்த ரயில்: வெறும் 3 அடி தூர இடைவெளியில் உயிர் தப்பினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
The Forecast 1 year ago ஆந்திரா
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் புடமேரு, கொல்லேறு ஏரிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் புடமேரு ஏரியால் பாதிக்கப்பட்ட சிங்க் காலனி பகுதில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார். அரசு வழங்கும் நல திட்ட உதவிகள் வந்து சேர்ந்ததா ? என்றும் விசாரித்தார். பின்னர் அவர் மதுராநகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் நடந்து சென்றவாறு, கீழேபாய்ந்தோடும் புடமேரு வெள்ளத்தை பார்வையிட்டார். அப்போது எதிரே எதிர்பாராத விதமாக வேகமாக ரயில் ஒன்று வந்தது. உடனே, சந்திரபாபு நாயுடுவை அவரது மெய்க்காப்பாளர்கள் இழுத்து பிடித்துக் கொண்டனர். வெறும் 3 அடியில் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக சென்றது. அதன் பின்னர் சிரித்து கொண்டே அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
0 Comments