Loading . . .




சொத்து குவிப்பு வழக்கு: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

The Forecast 2 years ago ஆந்திரா

ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுவனங்களில் முதலீடு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  2011ல் அவர் மற்றும் எம்பி விஜயசாய் ரெட்டி உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  ஜெகன்மோகன் 2012 மே மாதம் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.  ஜாமீனில் வெளியே வந்த முதல் முதல்வர் என்ற பெருமையை பெற்ற அவர், விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார்.  மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று முதல்வர் மீது எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றன.  ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்பி சகந்தி ஹரிராம் மனு தாக்கல் செய்தார்.  தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி என்வி ஸ்ரவன் குமார் அகியூர் ஆகியோர் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். ஜெகன்மோகன் ரெட்டி, சிபிஐ மற்றும் சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

0 Comments

Post your comment here

ஆந்திரா Relateted News