Loading . . .




தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன : போக்குவரத்து துறை

The Forecast 2 years ago போக்குவரத்துத்துறை

வரும் 15-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக போக்குவரத்துகழகங்கள் சார்பில் கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதைபோல் சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்ப வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,100 அரசு பேருந்துகளுடன் 3,167 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு 9,467 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

0 Comments

Post your comment here

போக்குவரத்துத்துறை Relateted News