அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை
The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை
தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த
ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக, (24.08.2022) போக்குவரத்துத்துறை
அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில், குரோம்பேட்டை. மாநகர் போக்குவரத்துக்
கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்தம் இறுதி
செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர்
டாக்டர்.கே.கோபால்,இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் செயலாளர், திரு.ஜி.கே.அருண் சுந்தர்
தயாளன்.இ.ஆ.ப. தொழிலாளர் தனி இணை ஆணையர், முனைவர். உலட்சுமிகாந்தன், ஊதிய.அ.அன்பு ஆபிரகாம்,
ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர்/கூட்டுனர் அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும்
பேரவை / தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments