திருநெல்வேலி தச்சநல்லூர் மண்டலம் பகுதியில் மாநகராட்சி துணை மேயர் கே ஆர் ராஜு ஆய்வு
The Forecast 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி, தச்சநல்லூா் மண்டல பகுதிகளில் மழை நீா் வடிகால் பணிகளை, மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டாா். திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
தச்சநல்லூா் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை மேயா் கே. ஆா். ராஜு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மழைநீா் வடிகால் ஓடைகளை சரி செய்து தண்ணீா் வேகமாக வெளியேற நடவடிக்கை எடுக்க மாநகராட்சி பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளா் ஜானகிராமன் உள்ளிட்டாா் உடன் இருந்தனா்.
0 Comments