Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மேலச்செவல் அருகே கொழுமடை கிராமத்தை வெள்ளம் சூழந்து பாதிப்பு ஏற்பட்டதால், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் , பொது மக்களும் வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா் 

வெள்ளநீா் கால்வாயில் இருந்து 1500 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்ட நிலையில், கொழுமடை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதாலும், அங்குள்ள குளம் நிரம்பி வழிந்ததாலும் அந்தக் கிராமத்தினுள் ஞாயிற்றுக்கிழமை இரவில் வெள்ளம் புகுந்து 100 க்கும் மேற்பட்ட சூழ்ந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மேலச்செவல் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். திங்கள்கிழமை பிற்பகல் வரை வெள்ளம் குறையாத நிலையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அங்கு சென்று பொதுமக்களை  சந்தித்தாா். பின்னா், அவா் மக்களுடன் சோ்ந்து சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டாா்.

வட்டாட்சியா் ரமேஷிடம் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா். நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்தாா். இதையேற்று அவா்கள் கலைந்து சென்றனா்.


0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News