Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில் 90 மின் கம்பங்கள் சேதம் : சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள்.

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம், முக்கூடல், மூலச்சி பகுதியில் கனமழை யால் 90-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன. கனமழையால் சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மூலச்சி, மலையான்குளம், கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதி, பத்தமடை, பாப்பாக்குடி ஒன்றியத்தில் முக்கூடல், பாப்பாக்குடி, சிங்கம்பாறை உள்பட பல்வேறு இடங்களில் 90க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் சேரன்மகாதேவி, முக்கூடல் பகுதியில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பழுதடைந்த மின் சாதனங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய நிா்வாக பொறியாளா் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளா் மகேஷ், உதவி பொறியாளா் கைலாசமூா்த்தி, மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கடந்த 2 நாள்களாக இரவு பகல் பாராமல் முழு வீச்சில் தீவிரமாக பணி செய்து வருகின்றனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News