திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சுற்றுவட்டாரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மழை வெள்ளத்தால் அதிகளவில் தண்ணீா் தேங்கிய குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த சிதம்பரபுரம், மூங்கிலடி, கக்கன்நகா், கருத்தான்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இம்முகாம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் செய்திருந்தனா்.
0 Comments