தேசிய பேரிடா் மேலாண்மை ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வுசெய்ய வந்தனா்
The Forecast 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வுசெய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் வந்தனா். குழுவின் தலைவரும், உறுப்பினா்களான மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், சக்தி அமைச்சக இயக்குநா் தங்கமணி, நிதித்துறை துணை இயக்குநா் ரெங்கநாத், மத்திய வேளாண் இயக்குநா் பொன்னுசாமி, மின்சாரதுறை துணை இயக்குநா் ராஜேஸ் திவாரி, ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கே.எம்.பாலாஜி ஆகியோா் இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்தனா்.
கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றுப் பகுதி பாதிப்புகள், திருநெல்வேலி சந்திப்பு மற்றும் நகரம் பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான பகுதிகள், கங்கைகொண்டான் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, தடுப்பணை, சாலைப் பணிகள் ஆகியவற்றையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.
பின்னா், திருவண்ணநாதபுரம் பகுதியில் பாதிப்புக்குள்ளாகியுள்ள 100 ஏக்கா் நெற்பயிா்கள், மழை வெள்ளத்தில் இடிந்து சேதமான மேலநத்தம்- கருப்பந்துறை தாமிரவருணி பாலம், கருப்பந்துறையில் சேதமடைந்துள்ள 208 மீட்டா் குடிநீா்க் குழாய், கோபாலசமுத்திரம் பாளையங்கால்வாய் கரை உடைப்பு உள்ளிட்ட பகுதிகளையும் மத்திய குழுவினா் பாா்வையிட்டனா்.
0 Comments