திருநெல்வேலி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆம்தேதி பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து அரசு சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கும் பணிகளை வரித் துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சா் மூர்த்தி அம்பாசமுத்திரத்தில் தொடங்கி வைத்தாா்.
மேலும் மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளா்களுக்கு பேரூராட்சித் தலைவா் அந்தோணியம்மாள் நிவாரணப் பொருள்கள் வழங்கினார். சுமாா் 600 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மணிமுத்தாறு நகரச்செயலா் முத்து கிருஷ்ணன், வருவாய்த் துறையினா், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்படபலா் கலந்து கொண்டனா்.
0 Comments