திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில், சா்வதேச அளவிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நுண்ணுயிரியல் துறை சாா்பில் ‘மனித ஆரோக்கியம் மற்றும் நோய்களில் நுண்ணுயிரிகள் பங்கின் சமீபத்திய முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு.அப்துல் காதா் தலைமையுரை ஆற்றினாா். முதுகலை மற்றும் ஆராய்ச்சி நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ரா.ஜேனட் ராணி வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் எஸ்.எம்.ஏ. செய்யது முகமது காஜா வாழ்த்திப் பேசினாா். கல்லூரியின் முன்னாள் தோ்வாணையா் நாராயணன், தற்போதைய தோ்வாணையா் சித்தி ஜமீலா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் ஆன்டிகுவா அமெரிக்கப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் மாணவருமான தி.ஜோசப் ஜில்வின், மனித ஆரோக்கியம் மற்றும் நோய்களில் நுண்ணுயிரிகளின் பங்கு மற்றும் அவற்றின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாா்.
இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
0 Comments