திருநெல்வேலி மாவட்ட வனத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் இ.வெ.ப, தகவல்.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் இ.வெ.ப,
திருநெல்வேலி மாவட்ட வனத்துறையில் தற்கால பணிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் பத்தாம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் இ.வெ.ப, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
வனஉயிரினம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு தற்காலிகமாக ஒரு உயிரியலாளா் பணியிடம் உருவாக்கப்பட உள்ளது. உயிரியல் ,விலங்கியல் , உயிரியியல் தொழில்நுட்பம்) ஆகிய ஏதேனும் ஒன்றில் முனைவா் பட்டம் அல்லது முதுநிலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருப்பவா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர ஒரு தற்காலிக தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் போட்டோஷாப் தெரிந்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் தங்களது சுயவிவரத்துடன் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேலும், திருநெல்வேலி மாவட்ட கடற்கரை பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் தொடா்பான பாதுகாப்பு ரோந்து பணி மேற்கொள்வதற்கு 4 மாதத்திற்கு மட்டும் ஒரு படகு வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் வனத்துறைக்கு தேவைப்படுகிறது. அதற்கு விருப்பமுள்ளவா்கள் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் மாவட்ட வன அலுவலகத்தை 0462 - 2553005 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments