Loading . . .




திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கென ரத்தமாற்று சிகிச்சை தனிப்பிரிவுவில் தொடங்கப்பட்டுள்ளது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான மென்பொருள் வெளியீடு மற்றும் செல்லப் பிராணிகளின் ரத்தம் மாற்று சிகிச்சைக்கான தனிப்பிரிவு தொடக்க விழா ராமையன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் எம். செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். கால்நடை இனப்பெருக்க மற்றும் ஈனியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் வை.பிரபாகரன் வரவேற்றாா். கால்நடை மருத்துவ துறை பேராசிரியா் மற்றும் தலைவா் வி.விஜய் ஆனந்த் பேசினாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சை இயக்குநா் சத்தியமூா்த்தி, சிகிச்சை பிரிவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

ரத்த மாற்று சிகிச்சை அவசர சூழ்நிலைகளில் கால்நடைகளுக்கு இன்றியமையாதது. இதற்கான வசதி ஒவ்வொரு பயிற்றுவிக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அத்தியாவசிய தேவையாகும். அதன்அடிப்படையிலேயே திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தகவல் பரிமாற்றம் மற்றும் மேலாண்மைக்காக தனியானதொரு மென்பொருள் உருவாக்கப்பட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால் செல்லப் பிராணிகளின் உரிமையாளா்கள் மற்றும் பண்ணையாளா்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு மின்னணு வசதியுடன் பதிவு கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை கட்ட இயலும். இதனால் அதிக நேரம் காத்திருக்க தேவை இருக்காது என்றாா் அவா். ஒருங்கிணைத்த கால்நடை சிகிச்சை வளாகத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் ம.பாலகங்காதரதிலகா் நன்றி கூறினாா்.


0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News