Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் சான்றிதழ்கள் சேதமானவா்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில், பெருமழை வெள்ள பாதிப்பினால் பிறப்பு, இறப்புச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை இழந்தவா்கள் அச்சான்றிதழ்களின் நகல்களை பெறுவதற்கு ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை அளித்துள்ளனா். அதுகுறித்து பரிசீலித்து விரைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மழை வெள்ளபாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை இழந்த மாணவா்- மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள  உயா்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்து கட்டணமின்றி தங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களைப் பெற தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணிலும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கண்காணிப்பு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News