திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுதொடா்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் ஆகியவை சாா்பில் புத்தகங்களோடு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்படி அருங்காட்சியகத்தில் அமைக்கப்படும் அரங்குகளில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (டிச. 31, ஜன.1) காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை புத்தகங்களை வாங்கலாம். புத்தகங்களுக்கு 10 முதல் 25 சதவிகிதம் வரை சலுகை அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) மாலை 4 மணிக்கு கவிஞா் கோ .கணபதி சுப்பிரமணியன் தலைமையில் ‘மனதில் மாற்றத்தை தந்த நூல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஸ்ரீராம் நாட்டியாலயா பள்ளி மாணவா்- மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திங்கள்கிழமை (ஜன. 1) கவிஞா் பாப்பாக்குடி இரா. செல்வமணி தலைமையில் சிறப்பு கவியரங்கமும், சிவாலய நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments