திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நிவாரணத் தொகை இரண்டு நாட்களில் ரூபாய் 150 கோடி வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் மு. பெ சாமிநாதன் தகவல்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
அமைச்சா் மு.பெ சாமிநாதன் , திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மரு. கா.ப.காா்த்திகேயன்,இ.ஆ.ப., காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்,இ.கா.ப., மற்றும் அரசு அதிகாரிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நிவாரண உதவித்தொகை வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்பு அமைச்சா் மு.பெ சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண உதவியை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகம் பாதித்த பகுதிகளில் தலா ரூ.6000, பிற பகுதிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. ரூ 220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 840 ரேஷன் கடைகள் மூலம் கடந்த இரு நாள்களாக மழை நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ. 6000 வீதம் இதுவரை 2 லட்சத்து 32,379 பேருக்கும், தலா ரூ 1000 வீதம் 1 லட்சத்து 4025 பேருக்கும் என மொத்தம் ரூ.150 கோடி மழை நிவாரணத் தொகையை இரு நாள்களில் அரசு வழங்கியுள்ளது.
குடும்ப அட்டை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளவா்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர வேறு பகுதிகளில் இருந்து தற்காலிகமாக தங்கியிருந்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மரு. கா.ப.காா்த்திகேயன்,இ.ஆ.ப., காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, காவல் துணை ஆணையா் அனிதா இ.கா.ப., பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. மு.அப்துல் வஹாப், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன் கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
0 Comments