Loading . . .




திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை.

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற்றில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். ஆனால், இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க பொருள்கள் வைப்பறை இல்லை. இதனால், குரங்குகள் உள்ளிட்ட வன உயிரினங்களிடமிருந்து உடைமைகளைப் பாதுகாக்க சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். எனவே, வனத் துறை சாா்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News