Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் பகுதியில் அரிய வகை மஞ்சள் பாறு கழுகுகள் : மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் இரா முருகன் இ.வெ.ப., தகவல்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலய பகுதியில் நான்கு அரியவகை மஞ்சள் பாறு கழுகுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரின காப்பாளா் இரா.முருகன் இ.வெ.ப.,  கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் கழுகுகள் கணக்கெடுப்பு டிச.30, 31 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. திருநெல்வேலி வனக்கோட்டத்தில் திருநெல்வேலி, குற்றாலம், கடையநல்லூா், சங்கரன்கோவில், சிவகிரி வனச்சரகங்களில் 10 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. வனப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 60 போ் இப்பணியில் ஈடுபட்டனா். இதில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பகுதியில் நெல்லையப்பபுரம் கிராமம் அருகே நான்கு அரியவகை மஞ்சள் பாறு கழுகுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இவை உயரமான மலைப்பகுதிகளில் தனியாக வசித்து வருபவை என்றாா் இரா.முருகன் இ.வெ.ப.

இந்த கணக்கெடுப்பில் திருநெல்வேலி வனச்சரக அலுவலா் சரவணக்குமாா், வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், உயிரியலாளா் கந்தசாமி, வனக்காப்பாளா்கள் மதியழகன், அஜீத் தேவ ஆசீா், பறவை மனிதா் பால்பாண்டியன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் பங்கேற்றனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News