திருநெல்வேலி மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு நாள் கெடு : மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் இ.ஆ.ப., அதிரடி உத்தரவு
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப.,
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகள், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் 24 மணி நேரத்திற்குள் அதை அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் கெடு விதித்துள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையையும், நடைபாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள், மேற்கூரைகள் ஆகியவற்றை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவா்கள் தாங்களாகவே அகற்றிட வேண்டும். தவறும்பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படும். ஆக்கிரமிப்பு பொருள்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஆக்கிரமிப்பு வகைக்காக அபராதக் கட்டணம், செலவு தொகையையும் செலுத்த நேரிடும். மேலும் கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்பு பணி செய்வோரும் கட்டட இடிபாடுகளையோ, கட்டுமானப் பொருள்களையோ பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாகவோ, கழிவுநீா் செல்லும் கால்வாய்களிலோ கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.
0 Comments