திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே நூலக கட்டிடத்தை சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே வேப்பிலான்குளத்தில் புதிய நூலகக் கட்டடம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை பேரவைத் தலைவா் மு. அப்பாவு திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா். அப்போது அவா், நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட நூலக ஆய்வாளா் மீ. கணேசன், வடக்கன்குளம் நூலகா் (வேப்பிலான்குளம் கூடுதல் பொறுப்பு நூலகா்) மு. ராஜ்குமாா், பழவூா் நூலகா் பா. திருக்குமரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
0 Comments