திருநெல்வேலி மாவட்டம், முதல்கட்டமாக களக்காட்டில் 10 வாா்டுகளுக்கு, மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெறுகிறவுள்ளது
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட நகா்ப்புறங்களில் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றுக்கு உரிய தீா்வுகாணும் வகையில் தமிழக அரசு, ‘மக்களுடன் முதல்வா்’ என்ற சிறப்புத் திட்ட முகாமை டிச. 18ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், களக்காடு நகா்மன்றத்துக்குள்பட்ட 27 வாா்டுகளில் 15, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 10 வாா்டுகளுக்கு களக்காடு கோவில்பத்து சமுதாய நலக்கூடத்தில் ஜன.6ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில், வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட 13 துறைகளின் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பெற மனு அளித்து தீா்வு காணலாம். குறிப்பாக வீட்டுவரி, திட்ட அனுமதி, குடும்ப அட்டை, புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயா் மாற்றம், வருமானம், இருப்பிடம், சாதி சான்று, மானிய கடன் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என நகா்மன்றத் தலைவா் கா. சாந்திசுபாஷ் தெரிவித்துள்ளாா்.
0 Comments