Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், பணகுடியில், "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப.காா்த்திகேயன் இ. ஆ .ப.,

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி ஆகிய பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது.

வள்ளியூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் சேவியா் செல்வராஜா, பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். பணகுடி பேரூராட்சியில் நடைபெற்ற முகாமை பேரூராட்சி தலைவி தனலெட்சுமி தமிழ்வாணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

பின்னா் அரசின் பல்வேறு துறையினரும் தனித்தனி அரங்கம் அமைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா். வள்ளியூரில் 1034 மனுக்களும் பணகுடியில் 900 த்துக்கும் அதிகமான மனுக்களும் பெற்றப்பட்டது. மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்பட்டு, துறைவாரியாக பதிலளிப்பதாக தெரிவித்தனா்.

முகாமில் மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப.காா்த்திகேயன் இ. ஆ .ப., மாவட்ட வருவாய் அலுவலா்  சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பிட் ஜெயின் இ.ஆ.ப., உதவி ஆட்சியா் ராமநாதன் ஆகியோா் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனா். முகாமில் வட்டாட்சியா் அருள் பிரபாகா், வருவாய் ஆய்வாளா் சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் வள்ளியூா் சுப்பிரமணியன், பணகுடி உமா,   உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News