Loading . . .




திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா ; தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை புதியநிர்வாக அலுவலக கட்டிடத்தை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.  புதிய அலுவலக கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  N. சிலம்பரசன் இ.கா.ப.,  குத்து விளக்கேற்றி சிறப்பித்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் இ.கா.ப., கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும், ஆயுத வைப்பு அறை, கோப்பு அறை, கணினி அறை, ஆண் காவலர்கள், பெண் காவலர்களுக்கென்று தனி ஓய்வறைகள், சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டும், தீயணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் உட்பட ரூபாய் 756 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நவீன முறையில்  கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை, துணை காவல் கண்காணிப்பாளர்,  சுப்பிரமணியன்   ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  மகேஸ்வரி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்  ராஜேஷ், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News