Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் அகத்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்ல வனத்துறை தடை

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அகஸ்தியா் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனாா்கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே நீா்வரத்துக் குறைந்து அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்லஅனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துஅணையிலிருந்து சுமாா் 4 ஆயிரம் கன அடி நீா் உபரியாக திறந்துவிடப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்தது.


0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News