Loading . . .




திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : மாவட்ட ஆட்சியர் மரு.கா.பா கார்த்திகேயன் இ.ஆ.ப., வழங்கினார்.

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட  ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., தலைமை வகித்து மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதில், 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழில்நுட்ப கல்வி உதவித்தொகையாக 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளையும், விபத்து உதவித்தொகை, பாம்பு கடித்து இறந்தமைக்கான உதவித்தொகை, மின்சாரம் தாக்கி இறந்தமைக்கான உதவித்தொகை என 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகையை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், உதவி ஆணையா் (கலால்) ராமநாதன், துணை வட்டாட்சியா் செ.மாரிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News