திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா நிகழ்ச்சி: சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் 101 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. செட்டிகுளம் ஊராட்சி ஸ்ரீ ரெங்கநாராயணபுரம் மேற்கு பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு அடிக்கல்நாட்டினாா். பின்னா், இருக்கன்துறை ஊராட்சி பொன்னாா்குளம் விலக்கில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை திறந்துவைத்த அவா், கொத்தன்குளம் கிராமம், அடங்காா்குளம் ஊராட்சி ஆகியவற்றில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.8 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டும் பணியை தொடங்கிவைத்தாா்.
மேலும், அடங்காா்குளத்தில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அவா், வடக்கன்குளத்தில் 77 பயனாளிகளுக்கும், காவல்கிணறில் 24 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினாா்.
0 Comments