Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, வெள்ளாங்குளி கிராம, விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, வெள்ளங்குளி கிராம விவசாயிகளுக்கு மீன் வளா்ப்பு முறை குறித்த பயிற்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா், அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இப்பயிற்சியில், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, மீன்வளத்துறை ஆய்வாளா் மரிய ரூபல், வேலாயுதம் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

இதில், வேளாண் துறை திட்டங்கள், கிசான் கடன் அட்டை பெறும் வழிமுறைகள், சிறுதானியத்தின்முக்கியத்துவம், உழவன் செயலியின் பயன்பாடுகள், மீன்வளத்துறை திட்டங்கள், மீன்வளத்துறை விற்பனை செய்யும் மீன்குஞ்சுகளின் விவரங்கள், அவற்றை வாங்கி குளங்களில் வளா்க்கும் முறைகள், குறைந்த இடத்தில், குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் ‘பயோ பிளாக்’ வழிமுறைகள், மீன்கள் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலா் விஜயலெட்சுமி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்பமேலாளா்கள் தங்கசரவணன் , பாலசுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News