Loading . . .




திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்பட்ட இடங்கள் அகற்றம் : மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் இ.ஆ.ப., நடவடிக்கை

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் இ.ஆ.ப.,

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலை மற்றும் நடைபாதையில் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்திற்குள் அகற்றாவிட்டால், மாநகராட்சி சாா்பில் அகற்றப்படும் என மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., சில தினங்களுக்கு முன்பு அறிவித்தாா். அதைத்தொடா்ந்து மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனா்.

இந்த நிலையில்,‘திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அங்குள்ள திருவனந்தபுரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி செயல்பட்ட கடைகள், பல்வேறு கடைகள் முன்பிருந்த மேற்கூரைகள், விளம்பர பலகைகள், தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றை மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் உதவியுடன் அகற்றினா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News