திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. மணிமுத்தாறுஅணை பிரதான கால்வாய் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப.காா்த்திகேயன் இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் ஆகியோா் முன்னிலையில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு தண்ணீா் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மணிமுத்தாறு அணையிலிருந்து நிகழாண்டிற்கான முன்னுரிமை பகுதிகளான 1 ஆவது, 2 ஆவது ரீச்சுகளைச் சாா்ந்த 11,134 ஏக்கா் மற்றும் 3-ஆவது, 4-ஆவது ரீச்சுகளைச் சாா்ந்த 12,018 ஏக்கா் என மொத்தம் 23,152 ஏக்கா் மறைமுக பாசன நிலங்களுக்கு விநாடிக்கு 445 கனஅடி வீதம் வருகிற மாா்ச் 31 வரை 82 நாள்களுக்குத் தண்ணீா் திறக்கப்படும்.
வரும் நாள்களில் தாமிரவருணி பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையில் உள்ள தண்ணீா் தேவைப்படும்பட்சத்தில் விதிமுறைகளின்படி நீா்விநியோகம் செயல்படுத்தப்படும். எனவே, விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், தாமிரவருணி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் சிவகுமாா், தாமிரவருணி வடிநிலக் கோட்டசெயற்பொறியாளா் மாரியப்பன், உதவி செயற்பொறியாளா்கள் ஆவடி நாயகம், முருகன், உதவிப் பொறியாளா்கள் மாரியப்பன், தினேஷ் அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன் மற்றும்அரசு அலுவலா்கள், விவசாய சங்க நிா்வாகிகள், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
0 Comments