Loading . . .




திருநெல்வேலி பள்ளி கல்லூரிகளில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு வியாழக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது. ‘நூற்றாண்டு விழா நாயகா் கலைஞா் சட்டப்பேரவையின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவா்களை ஈா்த்தது‘ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரியில் காலை 9.30 மணிக்கும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கும், திருநெல்வேலி நகரம் சா‘ஃ‘ப்டா் மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 3 மணிக்கும் கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மேயா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் நாடாளுமன்ற- சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News