திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுத்தை நடமாட்டம்? மாவட்ட வனத்துறை அதிகாரி முருகன் இ.வெ.ப., மறுப்பு
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
District Forest Officer, MURUGAN I.F.S.,
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள மூலக்காடு தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் தெரிவித்த கருத்தை திருநெல்வேலி மாவட்ட வனஅதிகாரி முருகன் இ.வெ.ப., மறுத்துள்ளாா். மூலக்காடு கிராமத்திலுள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். குறிப்பாக, சேவியா் என்பவா் தோட்டத்தில் சிறுத்தை திரிவதாக கூறிவந்தனா். மேலும், அந்தப் பகுதியில் பதிவான விலங்கின் கால்தடங்களையும் விவசாயிகள் புகைப்படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, அங்கு வனத்துறையினா் ஆய்வு செய்த நிலையில், மாவட்ட வன அதிகாரி முருகன் இ. வெ.ப., கூறியது: மூலக்காடு தோட்டப்பகுதியில் சிறுத்தைபுலி நடமாடுவதாக கூறப்பட்டது வதந்தியாக வந்த செய்தியாகும். இது குறித்து பொதுமக்களும் விவசாயிகளும் அச்சப்பட தேவையில்லை. அந்த பகுதியில் பதிவான கால்விரல் தடயங்கள் நாய்களின் கால்தடம்போல் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த போலியான தகவல்களை பரப்பவேண்டாம் என தெரிவித்துள்ளாா்.
0 Comments