Loading . . .




திருநெல்வேலியில் வரும் 19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு. கா.ப. கார்த்திகேயன் இ.ஆ.ப. தலைமையில் நடக்கிறது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலியில் வரும் 19 ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மரு. கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி-2024 ஆம் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.19) ஆட்சியா் அலுவலகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளாா்கள்.

எனவே, விவசாயிகள் குறைதீா்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டவிவசாயிகள் பங்கேற்க வேண்டுமென செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News