திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி : சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வ.உ.சி. மைதானத்தில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியை திருநெல்வேலி சட்ட மன்ற உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மாவட்ட இறகுப்பந்து கழக தலைவரும், டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையில் மண்டல இயக்குநருமான லயனல்ராஜ் வரவேற்றாா்.
தமிழ்நாடு இறகுப் பந்தாட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் அருணாசலம், முதன்மை துணைத் தலைவா் சுப்பிரமணியன், முதன்மை மண்டல மேலாளா் பிரேம்குமாா், திருநெல்வேலி மாவட்ட இறகுப்பந்து கழக துணைத் தலைவா் எம்.கே.எம். செய்யது மீரான், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி செய்யது முகமது காஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 258 போ் பங்கேற்றுள்ளனா். இறுதிப் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
0 Comments