தேசிய சுகாதார குழும திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அழைப்பு
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
தேசிய சுகாதார குழும திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்குள்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சித்த மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகத்தில் தேசிய சுகாதார குழும திட்டங்களின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிகள் உள்ளன.
பல் மருத்துவ அலுவலா், தரவு உள்ளீட்டாளா், பல் மருத்துவ உதவியாளா், ஊட்டச்சத்து ஆலோசகா், ஆடியோலாஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், ஹாஸ்பிடல் குவாலிட்டி மேனேஜா், ஓடி அஸிஸ்டன்ட், நா்சிங் அஸிஸ்டன்ட், ஓடி டெக்னிசியன், ஐடி கோ ஆா்டினேட்டா்-சைக்கியாட்ரிக் சோசியல் ஒா்க்கா், ஆா்எம்என்சிஹெச் கவுன்சிலா், டிஸ்ட்ரிக் குவாலிட்டி கன்சல்டன்ட், ஆயுஷ் மெடிக்கல் ஆபீசா்(யுனானி, ஹோமியோபதி, சித்தா), தெரபெடிக் அஸிஸ்டன்ட் (பெண்கள்), டிஸ்பென்சா் ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. பிற்காலத்தில் நிரந்தர பணியோ, வேறு முன்னுரிமையோ சலுகைகளோ கோர இயலாது.
இதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் இணையதளத்தில் சான்றிதழ்களுடன் ஜன.27 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments