திருநெல்வேலியில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு : அனைத்து வாகன ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மோட்டாா் வாகன புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.
ஓட்டுநா்களுக்கு தனி நல வாரியம், பணி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். சாலை விதிமுறைகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும். அனைத்து இடங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்த வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் அபராதத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பத்மராஜ் முன்னிலை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் கிறிஸ்டோபா், துணை ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியசாமி, மாவட்டப் பொருளாளா் மகேந்திரன், மாவட்டச் செயலா் சுடலை முத்து உள்பட பலா் பங்கேற்றனா்.
0 Comments