Loading . . .




திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி: மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் இரா.முருகன் இ. வெ.ப., தகவல்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரின காப்பாளா் இரா.முருகன் இ. வெ.ப.,

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜன. 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரின காப்பாளா் இரா.முருகன் இ. வெ.ப.,தெரிவித்தாா். இது குறித்த அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வனத்துறை மூலம் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற ஜன.27,28 ஆம் தேதி இரு நாள்களில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், காடன்குளம், திருப்புடைமருதூா் பறவைகள் பாதுகாப்பகம், அரமணநேரி, இராமநேரி, டானாா் குளம், சிலையம், விஜயநாராயணம், வேய்ந்தான்குளம், நயினாா்குளம், வண்ணாமாசேரி குளம், பாலாமடை, ராஜவல்லிபுரம், குப்பக்குறிச்சி, கல்குறிச்சி, கண்டியபேரி, கங்கைகொண்டான், சாரல்குளம், முக்கூடல் குளம், பிராஞ்சேரிகுளம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம், ராசிங்கபேரிகுளம், வழி வழிகுளம், ராமநதி அணை, கனடா நதி அணை, சமுத்திர குளம், சடையநேரிகுளம், பெரியகுளம், சுந்தரபாண்டியபுரம், நெடுவயல்குளங்களில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

எனவே பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெற விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் மற்றும் பறவை ஆராய்ச்சியாளா்கள் மாவட்ட வன அலுவலகம், திருநெல்வேலி தொலை பேசி எண் - 0462 255 3005 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம். மேலும் ஜன.26 ஆம் தேதி காலை 10 மணிக்கு கணக்கெடுப்பு பயிற்சி குற்றால வன ஓய்வு விடுதியில் நடைபெறுகிறது. அதே போல், திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனி மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News