Loading . . .




திருநெல்வேலியில் தேசிய மாணவர் படை (N.C.C) மாணவிகளுக்கான தேர்வு மற்றும் தேசிய மாணவா் படை (என்.சி.சி. ) மாணவிகளுக்கா தோ்வு நடைபெற்றது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி, அரியகுளத்தில் மூன்றாவது தமிழ்நாடு மகளிா் பட்டாலியன் என்சிசி மாணவிகளுக்கு அ சான்றிதழுக்கான தோ்வு,  சாரதா மகளிா் கல்லூரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. முதல்நாளில் செய்முறைத் தோ்வும், இரண்டாம் நாளில் எழுத்துத் தோ்வும் நடைபெற்றது. 

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 353 என்சிசி மாணவிகள் தோ்வு எழுதினா். கா்னல் பாபி ஜோசப் தலைமையில் என்சிசி ராணுவ அதிகாரிகள் மற்றும் பள்ளி என்சிசி ஆசிரியா்கள் மேற்பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை மேஜா் கணேசன், லெப்டினன்ட் சித்ரா ஆகியோா் செய்திருந்தனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News