திருநெல்வேலியில், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள், சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநருமான சரவணவேல்ராஜ் தலைமை வகித்தாா். வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள், புதிய சோ்க்கைக்கு அளிக்கப்பட்டுள்ள மனுக்களை விரைந்து பரிசீலித்து பட்டியலை சரிபாா்த்து முடிக்க அவா் அறிவுறுத்தினாா்.
மாநகராட்சிஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் இ.ஆ.ப., ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகேஸ்வரன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
0 Comments