திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூபாய் 8 கோடியில் பணிமனை கட்டிடம் : முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிமனை கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
அதைத்தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் உள்ள பணிமனையில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.
இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் 4 பணிமனை , சமையல் அறை, உணவுக்கூடம், ஆண், பெண் இருபாலா் மற்றும் மாற்றுத் திறனாளிக்கான கழிவறை சாய்வுதள வசதிகளுடன்அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 5 கணினி ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல புல முதல்வா் செண்பக விநாயக மூா்த்தி, செயற்பொறியாளா் கதிரவன், ஆகிரியா்கள், மாணவ, மாணவியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
0 Comments