திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
S. Shanmuganathan 1 year ago திருநெல்வேலி
திருநெல்வேலி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் (NSS), இளைஞர் நலத்துறை மற்றும் சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம், திருநெல்வேலி நேரு யுவ கேந்திரா ஆகிய குழுக்கள் இணைந்து, 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு தொடர்பான, விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, கல்லூரி கலையரங்கில், நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் "முனைவர்" சே.மு. அப்துல் காதர், தலைமை வகித்தார். திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆணையர் கே.பி.காமேசுவரன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சாலை விதிகள் மற்றும் அவற்றை பேணி நடத்தல் போன்றவை குறித்து. மாணவ மாணவிகளுக்கு, விரிவாக எடுத்துரைத்தார். அவருடைய உரையின் போது, "18 வயதுக்கு மேற்பட்டவர்கள். முறையாக லைசன்ஸ் பெற்று, வாகனங்களை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில், மூவர் பயணிப்பது. முற்றிலும் தவறு. அதிக சத்தத்துடன், வாகனங்களை இயக்குவதும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும். ஒரு போதும் கூடாது! "என்று. அறிவுரை பகர்ந்தார். வாகன விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய நோக்கம் ஆகியவற்றையும், மாணவ, மாணவிகளுக்கு, அவர் விளக்கமாக கூறினார்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.சந்திரசேகர், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கி.பேச்சிமுத்து ஆகியோர், சிறப்புரை ஆற்றினர். சின்சியர் சமூக சேவை நிறுவனர் அ.ஜமால் முகம்மது ஈஸா, நேரு யுவ கேந்திரா ஆலோசனை குழு உறுப்பினர்கள் "மேலச்செவல்" நெய்னா முகம்மது, "களக்காடு"மிதார் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர், அனைவரும் சாலை பாதுகாப்பு தொடர்பான "உறுதிமொழி"யினை, ஒருசேர ஏற்றுக் கொண்டனர்.
0 Comments