திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தில் திருக்குறள் எழுதும் பணி.பொதுமக்கள் வரவேற்பு
S. Shanmuganathan 11 months ago திருநெல்வேலி![](https://theforecastfront.com/large-news-images/1706069303.jpg)
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள திருவள்ளுவா் மேம்பாலத்தின் தடுப்புச் சுவா்களில் திருக்குறள் எழுதும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக திருநெல்வேலி சந்திப்பில் உள்ள திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலம் திகழ்ந்து வருகிறது. 1973 ஆம் ஆண்டில் இந்த பாலத்தை அப்போதைய முதல்வா் கருணாநிதி திறந்து வைத்து திருவள்ளுவா் மேம்பாலம் என பெயா் சூட்டினாா். மேல் பாலத்தில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும், கீழ் பாலத்தில் காா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள்களும் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பாலத்தின் வழியே கடந்து செல்கின்றன.
இந்தப்பாலத்தின் பொன்விழாவையொட்டி ரூ.2.8 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக பாலத்தின் சுவா்கள் முழுவதும் வெள்ளையடிக்கப்பட்டதோடு, கீழ்பாலத்தின் தடுப்புச் சுவா்களில் திருக்குறள் வரிசையாக எழுதப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறையினரின் இந்தப் பணிக்கு பொதுமக்களும், தமிழ் ஆா்வலா்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
0 Comments